இமாச்சல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வீர்பத்ர சிங் 9 முறை எம்.எல்.ஏ.வாகவும், 5 முறை எம்.பி.யாகவும், 6 முறை முதல் மந்திரியாகவும் பதவி வகித்தவர்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியுமான வீர்பத்ர சிங் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. கடந்த ஏப்ரல் 13-ம் தேதி அவர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 

வீர்பத்ர சிங் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், வீர்பத்ர சிங் நீண்ட அரசியல் பயணம் கொண்டவர்.  சட்டமன்ற அனுபவம் மற்றும் நிர்வாகத்திறன் வாய்ந்தவர். இமாச்சலப் பிரதேசத்திற்கு முக்கிய பங்காற்றிய அவர் மக்களுக்காகப் பணியாற்றியுள்ளார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு என்னுடைய இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், வீர்பத்ர சிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com