செங்கல்பட்டில் வீடு புகுந்து பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

செங்கல்பட்டில் பா.ம.க. பிரமுகரை வீடுபுகுந்து 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதுதொடர்பாக அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (வயது 32). இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகர தலைவராக பதவி வகித்து வகித்தவர் ஆவார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டில் குடும்பத்தாருடன் சத்யா இருந்தபோது, காரில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்ட தொடங்கினர்.

அப்போது வீட்டில் இருந்தவர்கள் அச்சத்தில் அலறவே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டனர்.

இதனையடுத்து செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலத்த காயம் அடைந்த சத்யாவை மீட்டு, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்பகை காரணமாக சத்யாவை மர்ம கும்பல் கொலை செய்ய முயன்றதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com