குண்டடம் அருகே கல்லூரி மாணவியை கடத்திய கட்டிட தொழிலாளி கைது

குண்டடம் அருகே 17 வயது கல்லூரி மாணவியை கடத்திய கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடத்தல்
கடத்தல்
Published on

குண்டடம்:

குண்டடம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் அரக்கோணம் சன்னதிதெருவை சேர்ந்த லட்சுமி காந்தன் என்பவரது மகன் தட்சிணாமூர்த்தி (வயது22). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 2 மாதங்களாக முகநூலில் கல்லூரி மாணவியுடன் பழகி வந்துள்ளார்.

அப்போது அந்த கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்திய தட்சிணாமூர்த்தி கடந்த 31-ந்தேதி அரக்கோணத்திற்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் அரக்கோணத்தில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து மாணவியை திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் கல்லூரி மாணவியின் தந்தை தனது மகளை காணவில்லை என குண்டடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் அரக்கோணத்தில் இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அரக்கோணம் சென்ற குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் அவர்கள் இருவரையும் குண்டடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் விசாரணை நடத்தியதில் மாணவிக்கு 18 வயது நிறைவு பெறவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 17 வயது மாணவியை கடத்தி சென்றதாக தட்சிணாமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com