சிறுமிக்கு குழந்தை பிறந்த வழக்கில் கட்டிட தொழிலாளி கைது

சேலம் அருகே சிறுமிக்கு குழந்தை பிறந்த வழக்கில் கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சேலம்:

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பசுபதி (வயது 25), கட்டிட தொழிலாளி. இவர் 15 வயதுடைய சிறுமியை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு இரு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பசுபதியும், அந்த சிறுமியும் வீட்டைவிட்டு வெளியேறி திருச்செங்கோட்டில் வசித்து வந்தனர். 

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து பசுபதி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com