தண்ணீர் சேமிப்பை ஊக்குவிக்க 100 நாள் பிரசாரம் -பிரதமர் மோடி மன் கி பாத் உரை

ஜல்சக்தி அமைச்சகம் மழைநீர் சேமிப்பு தொடர்பான பிரசாரத்தைத் தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் பிப்ரவரி மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

கோடை காலத்திற்காக மழைநீரை சேமிக்க வேண்டும். நீர்நிலைகளை சுத்தப்படுத்தி முறையாக தூர்வாருவதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியும். தண்ணீர் சேமிப்பு குறித்த நமது பொறுப்புணர்வை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சில நாட்களில், ஜல்சக்தி அமைச்சகம் மழைநீர் சேமிப்பு தொடர்பான பிரச்சாரத்தைத் தொடங்கும். 100 நாட்கள் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது. இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com