3 நிமிடத்தில் 53 திருக்குறள் ஒப்பித்து சிறுவன் சாதனை

பாளையங்கோட்டையில் 4 வயது சிறுவன் 53 திருக்குறளை மூன்று நிமிடத்தில் ஒப்பித்து சாதனை படைத்துள்ளான்.
சதுர் கிரிஷ் ஆத்விக்
சதுர் கிரிஷ் ஆத்விக்
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை அருள் நகரை சேர்ந்தவர் டாக்டர் பிரபுராஜ். இவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி டாக்டர் ஆர்த்தி ஹரிப்பிரியா. இவர் ஒரு பல் டாக்டர். இவர்களுக்கு சதுர் கிரிஷ் ஆத்விக் என்ற 4 வயது மகன் உள்ளார். இவன் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆங்கில வழி கல்வியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். 

சதூர் கிரிஷ் ஆத்விக் 2 வயது முதலே நல்ல அறிவுத்திறனும் ஞாபகசக்தியும் உடையவனாக வளர்ந்து வந்தான். இவருடைய பெற்றோர் இவருக்கு திருக்குறளை மனப்பாடம் செய்வதற்கு பயிற்சி அளித்துள்ளனர். அதன் பயனாக தற்போது 4 வயதில் 53 திருக்குறளை மூன்று நிமிடத்தில் ஒப்புவிக்கும் திறமை பெற்றுள்ளார். சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் இந்த மாணவனை பாராட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் குளோபல் ரிக்கார்டு ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவனம் இளம் வயது சாதனையாளர் என்ற விருதை வழங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com