ஆசிரியை வீட்டில் இருந்த 7½ பவுன் நகை மாயம்

மதுரையில் ஆசிரியை வீட்டில் இருந்த 7½ பவுன் நகை மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மதுரை:

மதுரை பொன்னகரம், புட்டுத்தோப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருபவர் சைனிகிரிஸ்டல்டா(வயது 29). இவரது வீட்டில் கீழஅண்ணாதோப்பு பகுதியை சேர்ந்த சங்கரி என்பவர் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் வைத்திருந்த 7½ பவுன் நகையை காணவில்லை. 

நகையை வீடு முழுவதும் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ஆசிரியை கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதில் தனது வீட்டில் வேலை பார்த்த பெண் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com