தென்தாமரைகுளம் அருகே தாய்-மகனை தாக்கிய 3 பேர் கைது

தென்தாமரைகுளம் அருகே முன்விரோத தகராறில் தாய்-மகனை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளம் அருகே வெள்ளையந்தோப்பு அய்யா கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 58). இவருடைய மனைவி நாகரத்தினம் (56). இவர்களுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுபாஷ் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தற்போது சுபாஷ் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று வீட்டு வேலை செய்த வேலையாட்கள் தங்கதுரையின் வீட்டு காம்பவுண்டு சுவர் மேல் ஏறி நின்று வேலை செய்ததாக தெரிகிறது. 

இதை பார்த்த நாகரத்தினம் எங்கள் காம்பவுண்ட் சுவரில் நின்று வேலை செய்யக்கூடாது என்று தகராறு செய்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த சுபாஷ் (32), அவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (28), கோகுலமதன் (32), செல்வதாஸ் (55), கண்ணன் (52), தேவிகா (50) ஆகியோர் நாகரத்தினத்தை தாக்கினர். இதை பார்த்த நாகரத்தினத்தின் மகன் வேல் முருகன் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் அடி விழுந்தது. காயமடைந்த தாயும், மகனும் கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரின் சுபாஷ் உள்பட 6 பேர் மீது தென்தாமரைக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்கென்னடி வழக்குபதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் விசாரணை நடத்தி தினேஷ், செல்வதாஸ், கண்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com