மணவாளக்குறிச்சி அருகே மாணவி தூக்குபோட்டு தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணவாளக்குறிச்சி அருகே மாணவி தூக்குபோட்டு தற்கொலை
Published on

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அம்மாண்டிவிளை உரப்பன விளை பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 43). இவரது மகள் கவுசல்யா (19). இவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

மாணவி கவுசல்யா கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் சென்று வந்துள்ளார். வீட்டில் பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்ல மறுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தொடர்ந்து கல்லூரிக்கு சென்றுவந்த மாணவி யாரிடமும் பேசாமல் மன வருத்தத்துடன் காணப்பட்டு உள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி கவுசல்யா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து மணவாளக் குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ராபர்ட் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com