கைகொடுத்த தென்மேற்கு பருவமழை - 25 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம்

கைகொடுத்த தென்மேற்கு பருவமழை - 25 அடியை நெருங்கிய வைகை அணை நீர்மட்டம்

கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 25 அடியை நெருங்குகிறது.
Published on

கூடலூர்:

தேனி மாவட்டத்திலும் பரவலாக சாரல் மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் வைகை அணை மற்றும் பெரியாறு அணை நீர் மட்டம் உயராமலே இருந்தது.

விவசாயத்திற்கு மட்டுமல்லாது குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. வைகை அணை நீர்மட்டமும் 20 அடிக்கு கீழ் சென்றதால் பொதுமக்கள் கவலை அடைந்தனர். 12 அடி வரை சகதி மேவி இருப்பதால் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படடது.

கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே வைகை அணைக்கு தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது.

மேலும் தேனி மாவட்டத்திலும் பரவலாக சாரல் மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 248 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 40 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டமும் 24.54 அடியாக உயர்ந்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு 225 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 112.40 அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87.09 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 18 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 2.8, தேக்கடி 0.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. மதுரை மாநகரம் மற்றும் சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில் தற்போது பெய்துள்ள மழையினால் குடிநீர் தட்டுப்பாடு ஓரளவு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை தொடர்ந்து பெய்தால் வைகை அணையின் நீர்மட்டமும் உயர்ந்து குடிநீர் சீராக வினியோகம் செய்ய முடியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com