சோலைநகரில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை

சோலைநகரில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோலைநகரில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை சோலைநகர் குறிஞ்சி வீதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது65), மீனவர். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். மகன் புதுவையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார்.

இதற்கிடையே அசோக்குமார் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆனால் இவரை குடும்பத்தினர் சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அசோக்குமார் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இதில் மனமுடைந்த அசோக்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் தூங்கிய பின்னர் கேபிள் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com