ஆலங்குடி அருகே பாம்பு கடித்து இளம்பெண் பலி

ஆலங்கு அருகே பாம்பு கடித்ததில் இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாம்பு கடி
பாம்பு கடி
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணா வல்குடியை சேர்ந்தவர் சீனி. இவரது மனைவி சுலோசனா (வயது 26). இவர் இதே பகுதியில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 12ந்தேதி இரவில் சுலோசனா வீட்டை விட்டு வெளியே சென்றார்.

அப்போது அவரை பாம்பு கடித்தது. உடனே அவரை சிகிச் சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுலோசனா நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com