பள்ளி மாணவி ‘செக்ஸ்’ சில்மி‌ஷம்- புரோட்டா கடை ஊழியர் கைது

பாளையில் பள்ளி மாணவியை சினிமாவுக்கு அழைத்து சென்று ‘செக்ஸ்’ சில்மி‌ஷம் செய்த புரோட்டா கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவி ‘செக்ஸ்’ சில்மி‌ஷம்- புரோட்டா கடை ஊழியர் கைது
Published on

நெல்ல:

பாளை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த செய்யது அலி மகன் முகமது அசாருதீன் (வயது20). இவர் பாளை சாந்திநகர் பகுதியில் உள்ள ஒரு புரோட்டா கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் 10-ம் வகுப்பு மாணவியை, முகமது அசாருதீன் அடிக்கடி பின் தொடர்ந்து சென்று காதல் வசனம் பேசியுள்ளார்.

அதில் அந்த நபருக்கும், அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அவர்கள் செல்போன் மூலம் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி பேசி வந்தனர். இந்த நிலையில் நேற்று முகமது அசாருதீன் மாணவியை ‘சினிமாவுக்கு போவோம் வா’ என்று அழைத்துள்ளார்.

வீட்டில் பெற்றோர் வெளியே சென்றிருந்ததால் அந்த மாணவியும் சரி என்று சொல்லி விட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் நேற்று பிற்பகல் நெல்லையில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். இந்த நிலையில் வெளியே சென்றிருந்த மாணவியின் பெற்றோர் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வீடு திரும்பினர்.

வீட்டில் மாணவியை காணாததால் அருகில் உள்ள வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் மாணவியை தேடினர். மாலையில் மேட்னி ஷோ முடிந்து முகமது அசாருதீனுடன் அந்த மாணவி சாந்தி நகர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த மாணவியின் உறவினர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி பிடித்தனர்.

அப்போது மாணவி தன்னை சினிமாவுக்கு என்று அழைத்து சென்று தியேட்டரில் வைத்து ‘செக்ஸ் சில்மி‌ஷம்’ செய்ததாக குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் குடும்பத்தினர், வாலிபர் முகமது அசாருதீனை பிடித்து பாளை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சினிமாவுக்கு அழைத்து சென்று ‘செக்ஸ் சில்மி‌ஷம்’ செய்ததாக போலீசில் மாணவி புகார் செய்தார். அதன் பேரில் பாளை மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டப்பிரிவில் வழக்குப்பதிந்து செய்து முகமது அசாருதீனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com