ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு- முதியவர் கைது

ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாட்டை சேர்ந்தவர் கோட்டைச்சாமி. (வயது60). அதேபகுதியில் ஒரு கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவியிடம் இவர் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. 

இதுபற்றி மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து கோட்டைச்சாமி மீது வருசநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இதைதொடர்ந்து கோட்டைச்சாமியை போலீசார் கைது செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com