தொட்டியம் பகுதியில் மணல் கடத்தல்- 5 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் திருட்டுத்தனமாக மணல் கடத்திய 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொட்டியம் பகுதியில் மணல் கடத்தல்- 5 வாகனங்கள் பறிமுதல்
Published on

தொட்டியம்:

திருச்சிமாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள காவிரிக்கரையோரங்களில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து தொட்டியம் தாசில்தார் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் லதா மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது தொட்டியம் வாணப்பட்டறை அருகே திருட்டுத்தனமாக மணல் ஏற்றிச் சென்ற ஒரு வேனையும்,  மணமேடு அருகே திருட்டு மணல் ஏற்றி வந்த 2 சரக்கு ஆட்டோக்களையும், ஒரு வேனையும், ஒரு மொபட்டையும் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். 

இது குறித்து தொட்டியம் வருவாய் ஆய்வாளர் லதா கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குபதிவு செய்து மணல் திருட்டில் ஈடுபட்டதாக தொட்டியத்தை சேர்ந்த விக்னேஷ்(24), கொளக்குடியை சேர்ந்த மணி(46), கருப்பணாம்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் (22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடி 2 பேரை தேடி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com