கணவனின் குடிப்பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்

மதுப்பழக்கத்தால் கேரளாவில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

கொல்லம்:

கேரள மாநிலம் கொல்லம் அருகே குண்டற பகுதியை சேர்ந்தவர் சிஜூ. தனியார் பேருந்து நடத்துநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ராகி என்ற மனைவியும், 3 வயதான ஆதி என்ற மகனும் இருந்தனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிஜூ, தினமும் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குடிபோதையில் வந்த சிஜூ தன் மனைவியை தாக்கவே, விரக்தியடைந்த அவர் தன் மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார்.

இதனிடையே ராகியின் தந்தை தன் மகளை தேடி வந்த போதுதான் அவர் மாயமானது தெரியவந்தது. விசாரணை நடத்திய போது, தாயும் மகனும் அந்த பகுதியில் உள்ள ஏரியில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிஜூவும் தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி, மகனின் மரணத்தால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தில் 3 பேரும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com