

இதுபோல், கோவில் திருவிழா, பிரதிஷ்டை தினம், விஷூ பண்டிகை, ஓணம் பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று 14-ந்தேதி (புதன் கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 19-ந்தேதி வரை ஆனி மாத பூஜைகள் நடைபெறும். இந்நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, நெய் அபிஷேகம் உட்பட வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து புதிய கொடி மர பிரதிஷ்டையை முன்னிட்டு இடைவேளையின்றி கோவில் நடை திறந்து பூஜைகள் நடைபெறும்.
வருகிற 25-ந்தேதி புதிய கொடி மர பிரதிஷ்டை நடக்கிறது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சன்னிதானத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
புதிய கொடி மர பிரதிஷ்டையை தொடர்ந்து 28-ந்தேதி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை 6- ந்தேதி சரம்குத்தியில் பள்ளி வேட்டையும், 7-ந் தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறும். ஆனிமாத பூஜை, புதிய கொடி மர பிரதிஷ்டை, கோவில் திருவிழா ஆகியவற்றை முன்னிட்டு சபரிமலை கோவில் ஜூலை 7-ந்தேதி வரை 24 நாட்கள் திறந்து இருக்கும்.
ஆனிமாத பூஜை, புதிய கொடிமர பிரதிஷ்டை மற்றும் கோவில் திருவிழா ஆகியவை சேர்ந்தே வருவ தால், 24 நாட்கள் நடைபெறும் தொடர் பூஜைகளை முன் னிட்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.