சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

புனேவில் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 5 சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது
Published on

மராட்டிய மாநிலம் புனேவில் 8 வயது சிறுமியை 6 பேர் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். சிறுமிக்கு உடல் நலம் சரியில்லாததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவளை சோதனை செய்த மருத்துவர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள் என கூறினார். இந்த உண்மை தெரிய வந்ததும்  பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

சம்பந்தப்பட்ட 6 பேர் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த ஆறு பேரும் சிறுமி படிக்கும் பள்ளியில் பயின்று வந்துள்ளனர். மேலும் ஒரே பகுதியில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் சிறுமியிடம் சாக்லேட் வாங்கி கொடுத்து ஏமாற்றி பலாத்காரம் செய்தனர்.


6 பேரில் 5 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 19 வயது வாலிபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

8 வயது சிறுமி 5 சிறுவர்கள் உட்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com