கண்டோன்மெண்ட் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

கண்டோன்மெண்ட் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் ஏற்படும் என்று மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
கண்டோன்மெண்ட் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

திருச்சி:

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தென்னூர் செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி கோர்ட்டு துணை மின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் நாளை(சனிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே, இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்னர்ஸ் ரோடு, வில்லியம்ஸ் சாலை, பாரதிதாசன் சாலை, கண்டோன்மெண்ட் பகுதிகள், பீமநகர், ஆழ்வார்தோப்பு, சின்னசாமி நகர், ஹீபர் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com