செம்மரக் கடத்தலை தடுக்க தகவல் அளித்தால் சன்மானம்- ஐ.ஜி. காந்தாராவ் தகவல்

செம்மரக் கடத்தலை தடுக்க தகவல் அளித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று ஐ.ஜி. காந்தாராவ் கூறியுள்ளார். #semmaramwood
செம்மரக் கடத்தலை தடுக்க தகவல் அளித்தால் சன்மானம்- ஐ.ஜி. காந்தாராவ் தகவல்
Published on

திருப்பதி:

திருப்பதியில் உள்ள செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஐ.ஜி. காந்தாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

செம்மரக் கடத்தலை தடுக்கும் வகையில் உறுதியான தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்.

சமீபத்தில் லாரியில் ஆந்திராவுக்கு வந்து ஆஞ்சநேயபுரம் செக்போஸ்ட்டில் கைது செய்து விடுவிக்கப்பட்ட 84 தமிழர்கள் பற்றிய தகவல் அளித்த இன்பார்மருக்கும் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்.

இதற்கு முன்னர் சந்திரகிரி அருகே இதே போல் செம்மரம் வெட்ட தமிழ்நாட்டில் இருந்து பஸ்சில் வந்த 42 பேரை தடுத்து நிறுத்தி விடுவித்தோம். அப்போது தகவல் கொடுத்த ஊர்காவல் படைவீரருக்கு 2 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டது.

செம்மரக் கடத்தல் பற்றிய தகவல்களை 180042500425 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண் அல்லது 08772284003 அல்லது 09030796371 ஆகிய எண்களுக்கு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். #semmaramwood #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com