தேவாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: கட்டிட தொழிலாளி கைது

வத்தலக்குண்டு அருகே தேவாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
நாகராஜன்
நாகராஜன்
Published on

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மேலக்கோவில்பட்டியில் உள்ள புனித சவேரியார் தேவாலயத்தின் மீது, கடந்த 14-ந்தேதி இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

இந்த நிலையில் தேவாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக மேலக்கோவில்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி நாகராஜன் (வயது 25) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகராஜனின் உறவினர் திருமணம் தேவாலயத்தில் நடந்தது. அப்போது ஒலிப்பெருக்கி வைப்பதற்கு தேவாலய நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தேவாலயத்தின் மீது நாகராஜன் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com