புதுவையில் பெயிண்டர் மயங்கி விழுந்து மரணம்

புதுவையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த பெயிண்டர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மரணம்
மரணம்
Published on

புதுச்சேரி

புதுவை உப்பளம் நேத்தாஜி நகர் பாரதியார் வீதியை சேர்ந்தவர் நோயல் என்ற லாரன்ஸ், பெயிண்டர். இவரது மனைவி மோட்ச ராக்கினி இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

நோயல் என்பவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில்  சிகிச்சை பெற்று வந்தார். 

திடீரென நேற்று காலை நோயல் மயங்கி விழுந்தார். உடனே அவரது மனைவி அவரை மீட்டு  தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து மோட்சராக்கினி ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com