நடராஜன் மறைவு - சசிகலாவுக்கு 10 நாட்கள் பரோல்?

நடராஜன் மறைவையடுத்து அவரது மனைவி சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு சிறை கண்காணிப்பாளரிடம் அவரது வழக்கறிஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். #Natarajan #VKSasikala #NatarajanMaruthappa
நடராஜன் மறைவு - சசிகலாவுக்கு 10 நாட்கள் பரோல்?
Published on

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் (வயது 74) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடராஜன் மறைந்ததையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள அவரது மனைவி சசிகலா பரோலில் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு சிறை கண்காணிப்பாளரிடம் அவரது வழக்கறிஞர்கள் விண்ணப்பித்தனர். மனுவை பரிசீலித்த சிறைத்துறை, சசிகலாவுக்கு 10 நாட்கள் பரோல் கிடைக்கலாம்  என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து சசிகலா தமிழகம் வந்து நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளார். #Natarajan #VKSasikala #NatarajanMaruthappa #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com