மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி

தர்மபுரியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
விபத்து
விபத்து
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் கெங்குசெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காசி (வயது 50). தொழிலாளி. இவரது நண்பர் மாட்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாது (50).

இவர்கள் இருவரும் குந்தல்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். குண்டல்பட்டிமேடு அருகே வந்தபோது சென்டர் மீடியனில் ஏறி ரோட்டை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மாதுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து மதிகோண்பாளையம் போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து வந்து காசி உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாதுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com