தொட்டியத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கொத்தனார் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த கொத்தனார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தொட்டியத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கொத்தனார் பலி
Published on

தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் கள்ளுக்கடை வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் முருகானந்தம் (26). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 12-ந்தேதி தொட்டியம் மாதா கோவில் அருகில் திருச்சி - சேலம் மெயின் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது அந்த பகுதியை சேர்ந்த ராஜவர்மன்(20) என்பவர் ஓட்டி வந்த இரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. 

இதில் முருகானந்தம் பலத்த காயமடைந்தார். அவரை நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முருகானந்தம் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com