வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல்சரகம் தொண்டியக்காடு பகுதியை சேர்ந்தவர் உலகநாதன் மகன் ராஜூவ்காந்தி(வயது36). இவர் ஆய்காரன்புலம் 2-ம்சேத்தி பாப்புரெட்டி குத்தகை பகுதியை சேர்ந்த பூபதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு மாமனார் வீட்டிலேயே தங்கி விவசாய கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 16-ந்தேதி ராஜூவ்காந்தி வாய்மேடு மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தகட்டூர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் ராஜூவ்காந்தி படுகாயமடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com