தடையை மீறி நடை பயணம்: மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் 400 பேர் கைது

தஞ்சாவூரில் தடையை மீறி நடைபயணம் நடத்த முயன்ற மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீதர் வாண்டையார் கைது செய்த போது எடுத்த படம்.
ஸ்ரீதர் வாண்டையார் கைது செய்த போது எடுத்த படம்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு நடை பயணம் செல்ல மூவேந்தர் முன்னேற்ற கழகம் முடிவு செய்தது. ஆனால் இதற்கு காவல் துறையினர் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் நதிகளை இணைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி தஞ்சாவூர் திலகர் திடலில் இருந்து மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில், நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணி செல்வதற்காகத் திரண்டனர். இதுதொடர்பாக பேரணிக்கு திரண்ட ஸ்ரீதர் வாண்டையர் உட்பட 400 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதனிடையே ஸ்ரீதர் வாண்டையார் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

இந்த நடைபயணத்தை முன்பே அறிவித்து விட்டோம். ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து செல்ல அனுமதி இல்லை என போலீசார் மறுத்துவிட்டனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தகட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com