மேட்டூர் அணையில் மூழ்கி வாலிபர் பலி

தந்தை கண் எதிரே மேட்டூர் அணையில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மேட்டூர்:

சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சவுந்தரராஜன் (வயது 20). இவர் சலூன்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். நேற்று காலையில் தந்தையும், மகனும் மேட்டூர் அணைக்கு வந்தனர். அங்குள்ள அணையின் வலதுகரையையொட்டி உள்ள அணையின் நீர்த்தேக்க பகுதியில் இருவரும் சென்றனர். சவுந்தரராஜனுக்கு நீச்சல் தெரியாது. இருப்பினும், நீர்த்தேக்கத்தில் கரையையொட்டி அவர் நின்று குளித்தார். தந்தை ஆறுமுகம் கரையில் அமர்ந்து மகன் குளிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சவுந்தரராஜன் திடீரென நீரில் மூழ்கினார். உடனே அவருடைய தந்தை, மகனை காப்பாற்ற முயற்சி செய்தார்.

ஆனால் அவரால் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகன் தண்ணீரில் மூழ்கி இறந்ததை கண்டு அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த பரிதாப சம்பவம் குறித்து மேட்டூர் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கிய சவுந்தரராஜனின் உடலை மீட்டனர். 

இதையடுத்து அணையில் மூழ்கி இறந்த சவுந்தரராஜனின் உடல் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. தந்தை கண் எதிரே மேட்டூர் அணையில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com