கடன் தொல்லையால் வியாபாரி தீக்குளித்து தற்கொலை

கடன் தொல்லையால் ஆன்லைன் வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கொழிஞ்சாம்பாறை:

பாலக்காடு மாவட்டம் சித்தூர் பத்தன்சேரி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 42). இவர் எர்ணாகுளத்தில் ஆன்லைனில் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் தொழிலுக்காக ஆன்லைனில் பல தடவை கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே ரமேஷ் மனவேதனையுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ரமேஷ் நிறுவனத்திற்கு சென்றார். பின்னர் மதியம் வீட்டிற்கு திரும்பி வந்தார். நேராக தனது அறைக்குள் மண்எண்ணை கேனுடன் சென்று பூட்டி கொண்டார். சிறிது நேரத்தில் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டு அலறி சத்தம் போட்டார்.

அவரது சத்தம் கேட்ட தாய் மணி, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். மேலும் இதுகுறித்து சித்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலில் தீக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த ரமேஷை மீட்டு சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com