புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் ஆசிரமவாசி வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண் கைது

புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் ஆசிரமவாசி வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் ஆசிரமவாசி வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண் கைது
Published on

புதுச்சேரி:

புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் தனியார் அபார்ட் மெண்டில் வசித்து வருபவர் மேதாசாகூர். இவர் அரவிந்தர் ஆசிரமத்தில் கேண்டீனில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி சத்ய பாமா சாகூர். இவர்களது வீட்டில் முத்தியால் பேட்டை அங்காளம்மன் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மேரிஜோஸ்பின் (36) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று சத்ய பாமா சாகூர் தனது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை கழற்றி கட்டிலில் வைத்திருந்தார். மறுநாள் அந்த செயினை காணாமல் சத்யபாமா சாகூர் அதிர்ச்சி அடைந்தார். செயினை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் செயின் திருட்டு போனது முதல் வீட்டு வேலை செய்ய மேரிஜோஸ் பின் வரவில்லை. இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த சத்யபாமா சாகூர் இதுபற்றி பெரியகடை போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் மேரி ஜோஸ்பினை போலீசார் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, அவர் செயினை திருடி சென்றதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து மேரி ஜோஸ்பினை கைது செய்து அவரிடம் இருந்து 2 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com