குழந்தையிடம் நகையை திருடிய வேலைக்கார பெண் கைது

திருப்பூரில் குழந்தையிடம் நகையை திருடிய வேலைக்கார பெண்ணை கைது செய்த போலீசார் நகையை பறிமுதல் செய்தனர்.
கைது
கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் செரீப் காலனியை சேர்ந்தவர் அன்னபூரணி. நேற்று தனது பேத்தியை கொஞ்சியபோது குழந்தையின் கழுத்தில் இருந்த 3 பவுன் நகை மாயமானது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த அவர் வீட்டில் பல இடங்களில் நகையை தேடிப்பார்த்தார். ஆனால் நகை கிடைக்கவில்லை. நகையை மர்ம நபர் திருடிச்சென்று விட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் அன்னபூரணியின் வீட்டில் வேலை செய்த பல்லடத்தை சேர்ந்த ஸ்நேகா என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நகையை பறிமுதல் செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com