மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, உத்தர பிரதேச மாநில கொரோனா அப்டேட்ஸ்....

மகாராஷ்டிரா மாநிலத்தில் 40,956 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவில் 39,510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71,966 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 793 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 51,79,929 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 45,41,391 பேர் குணமடைந்துள்ளனர். 77,191 பேர் உயிரிழந்துள்ளனர். 5,58,996 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,990 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 15,198 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 7,03,594 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,63,133 பேர் குணமடைந்துள்ளனர். 8,629 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,31,832 பேர் கிசிச்சை பெற்று வருகிறார்கள்.

ராஜஸ்தானில் இன்று 16,080 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,198 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 169 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 7,89,274 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,05,730 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,510 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 22,584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 480 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 20,13,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,852 பேர் உயிரிழந்துள்ளனர். 14,05,869 பேர் குணமடைந்துள்ளனர். 5,87,452 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,358 பேர் குணமடைந்துள்ளனர். 306 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 15,45,212 பேர் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,16,057 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com