

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,236 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 61,607 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 549 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை மகாராஷ்டிராவில் 51,38,973 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 44,69,425 பேர் குணமடைந்துள்ளனர். 76,398 பேர் உயிரிழந்துள்ளனர். 5,90,818 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,592 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 14,931 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 6,92,604 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,47,935 பேர் குணமடைந்துள்ளனர். 8,511 பேர் உயிரிழந்துள்ளனர். 1,36,158 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,305 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 32,188 பேர் குணமடைந்துள்ளனர். 596 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,71,006 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக 19,73,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி புதிதாக 16,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,499 பேர் குணமடைந்துள்ள நிலையில், 160 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 2,03,017 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 7,73,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.