பீளேர் பகுதியில் லாரி மோதி முதியவர் பலி

பீளேர் பகுதியில் லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

ஸ்ரீ காளஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் பீளேர் சென்னாரெட்டி தெருவை சேர்ந்தவர் வெங்கடப்பா (வயது 65). இவர் எல்லமந்தா வளைவு அருகில் உள்ள தன்னுடைய மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். கடப்பா சாலையைக் கடந்தபோது கர்னூலில் இருந்து சித்தூர் நோக்கி கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி சென்ற லாரி வெங்கடப்பா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு பீளேர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருப்பதி ருயா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து பீளேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திப்பேசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com