கோத்தகிரி லாட்ஜில் தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்

கோத்தகிரி லாட்ஜில் தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கோத்தகிரி லாட்ஜில் தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்
Published on

கோத்தகிரி:

சேலம் அழகாபுரம் சாந்தி நகரை சேர்ந்தவர் சுகுமாறன் (55). அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் இவர் கோத்தகிரி வந்தார். அங்குள்ள பஸ் நிலையம் அருகில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார். ஆனால் அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் கதவை தட்டினார்கள். ஆனால் உள் பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஜன்னலை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு படுக்கையில் சுகுமாறன் பிணமாக கிடந்தார். அவரது வாயில் நுரை தள்ளியபடி இருந்தது. இது குறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் லாட்ஜுக்கு விரைந்து வந்தனர். அறை கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள் மர்மமாக இறந்த சுகுமாறன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com