கொருக்குப்பேட்டையில் ரவுடி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 4 பேர் கைது

கொருக்குப்பேட்டையில் ரவுடி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொருக்குப்பேட்டையில் ரவுடி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 4 பேர் கைது
Published on

ராயபுரம்:

கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் சரவணன் என்கிற வெள்ளை சரவணன் (35). ரவுடி. ஜாமீனில் வந்த அவரை நேற்று முன்தினம் இரவு கொருக்குப்பேட்டை சி.பி. ரோட்டில் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அண்ணன் தம்பிகளான இதயஅரசு, தென்னரசு மற்றும் ரமேஷ், 15 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். ரவுடி சரவணனின் குழந்தைக்கும், இதயஅரசின் குழந்தைக்கும் இடையே ஏற்பட்ட தகராறினால் நடந்த மோதலில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com