மத்தூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது

மத்தூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைது
கைது
Published on

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள பெருகோபனபள்ளி பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் கடந்த 8-ந்தேதி அன்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த பின் பெற்றோரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அந்த மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து மாணவியின் பெற்றோர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மாணவியை கடத்தியதாக பெருகோபனபள்ளி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் பரத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com