கழிவறைக்காக தந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமிக்கு கபில்தேவ் பாராட்டு

வீட்டில் கழிப்பறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த ஆம்பூர் சிறுமிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். #AmburGirl #KapilDev
தந்தை மீது போலீசில் புகார் அளித்த சிறுமிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கபில்தேவ் வழங்கியபோது எடுத்தபடம்.
தந்தை மீது போலீசில் புகார் அளித்த சிறுமிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கபில்தேவ் வழங்கியபோது எடுத்தபடம்.
Published on

ஆம்பூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் சமூக நலத்திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய கபில்தேவ் கூறியதாவது:-

இந்திய நாடு ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நாடு ஆகும். உலகில் இந்தியா போன்று எந்த நாடும் இல்லை. பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது. அதனால் இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com