கட்சி தொண்டர்கள், பொது மக்களுடன் கமல்ஹாசன் நாளை யூடியூபில் பேசுகிறார்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கட்சித் தொண்டர்கள், பொது மக்களுடன் நாளை காலை யூடியூப் நேரலையில் பேசுகிறார்.
கட்சி தொண்டர்கள், பொது மக்களுடன் கமல்ஹாசன் நாளை யூடியூபில் பேசுகிறார்
Published on

சென்னை:

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கட்சித் தொண்டர்கள், பொது மக்களுடன் நாளை காலை யூடியூப் நேரலையில் பேசுகிறார்.

இது தொடர்பாக கட்சி உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

எத்தனையோ பணிகள் இருந்தாலும், மய்யத்தில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான உடனடிக் கடமை ஒன்று இருக்கிறது. அதுதான் நம் கிராமியத்தை வளர்ப்பது. இந்தக் கடமையை ஆற்றுவதற்கு நான் உங்கள் ஆற்றலையும், நேரத்தையும், நாடுகிறேன்.

இதுகுறித்து உங்கள் அனைவரிடத்திலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை யூடியூபில் நேரலையின் மூலம் பேச விரும்புகிறேன். www.maiam.com/gramiyam இந்த இணைப்பில் நாளை காலை 10.30 மணிக்கு என்னுடன் இணையுங்கள்.

www.maiam.com/gramiyam/form என்ற இணைய தளத்தில் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KamalHassan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com