களக்காடு - டோனாவூரில் சாலையில் நின்று ரகளை செய்த 2 பேர் கைது

களக்காடு மற்றும் டோனாவூரில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

களக்காடு:

களக்காடு சப்-இன்ஸ் பெக்டர் லிபிபால்ராஜ் மற்றும் போலீசார் களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது ஜெ.ஜெ.நகர் கீழகாலனியை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மணிகண்டன் (வயது 29) சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு அவதூறாக பேசி ரகளை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுபோல ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் டோனாவூரில் ரோந்து சென்ற போது அதே ஊரைச்சேர்ந்த தானியேல் மகன் எட்வின் துரை (40) சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு அவதூறாக பேசியதுடன் ரகளை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com