கிருஷ்ணகிரியில் அழகு நிலைய உரிமையாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரியில் தொழில் போட்டி காரணமாக அழகு நிலைய உரிமையாளரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
வழக்கு
வழக்கு
Published on

கிருஷ்ணகிரி:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 41). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலையில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆனந்த் (வயது 35) என்பவரும் அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழில் போட்டி காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று ஆனந்த், அவரது மனைவி அனிதா மற்றும் உறவினர்கள் கோகுல், ஷகில் ஆகியோர் கந்தசாமியை தாக்கினார். 

இதில் காயமடைந்த கந்தசாமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி போலீஸ் நிலையத்தில் ஆனந்த் உள்பட தாக்கிய 4 பேர் மீது கந்தசாமி புகார் செய்தார்.

இது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com