தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் உடலுக்கு தமிழக ஆளுநர், முதல்வர் நேரில் அஞ்சலி

புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் இன்று காலமான நிலையில், நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தமிழிசை தாயார் உடலுக்கு தமிழக அளுநர், முதல்வர் அஞ்சலி
தமிழிசை தாயார் உடலுக்கு தமிழக அளுநர், முதல்வர் அஞ்சலி
Published on

புதுச்சேரி, தெலுங்கானா கவர்னர் தமிழிசையின் தாயார் கிருஷ்ணகுமாரி (வயது 78) இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக அவரது உடல் தெலுங்கானாவில் இருந்து இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டது. அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணவேணியின் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி  செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கே.என். நேரு உடனிருந்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com