விபத்தில் வாலிபர் பலி - நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

கும்பகோணம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவத்திற்கு நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்
ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்
Published on

தஞ்சாவூர்:

கும்பகோணம் அருகே உள்ள மேலாத்துகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் லெட்சுமணன் (வயது 26). டிராக்டர் டிரைவராக இருந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சிக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறியபோது தவறி கீழே விழுந்தார். இதில் அதே பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் லெட்சுமணன் இறந்தார்.

இந்த விபத்துக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி அவரது தந்தை சின்னதம்பி தஞ்சாவூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் சிறப்பு நீதிமன்றனத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விபத்தில் இறந்த லெட்சுமணன் குடும்பத்துக்கு விழுப்புரம் கோட்டம் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ. 13 லட்சத்து 90 ஆயிரத்து 200 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த தொகையை வழங்காததால் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்று தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு நிறைவேற்று ஊழியர் ஜெயந்தி தலைமையில் வக்கீல் ரகுபதி மற்றும் ஊழியர்கள் சென்றனர். அங்கு வேலூருக்கு செல்லவிருந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com