உத்தனபள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

உத்தனபள்ளி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 5 பேரை கைது செய்தனர்.
உத்தனபள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
Published on

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் வெங்கடேஸ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அளேசீபம் பகுதியை சேர்ந்த பசவராஜ் என்பவருக்கு சொந்தமான புளியந்தோப்பில் பணம் வைத்து சூதாடியதாக மாரப்பா (வயது42), காவேரி (39), முனிராஜ் (42), புதுப்பேட்டையை சேர்ந்த வெங்கடாஜலபதி (42), கருக்கம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (27) ஆகிய 5 பேரை  போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.600 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com