தூத்துக்குடியில் மீனவர் தற்கொலை

தூத்துக்குடியில் மனைவி குடி பழக்கத்தை கண்டித்ததால் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடியில் மீனவர் தற்கொலை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி சிலுவை பட்டியை சேர்ந்தவர் ஜோசப்(வயது 37). மீனவர். இவரது மனைவி அஞ்சலா. ஜோசபுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று ஜோசப் குடித்துவிட்டு வந்துள்ளார். இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜோசப் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com