ஏம்பலம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

ஏம்பலம் அருகே பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டு கொண்டதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏம்பலம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

ஏம்பலம் அருகே மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் சங்கீதா (வயது18) இவர் 10-ம்வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே ஜெய்சங்கரும் அவரது மனைவியும் எத்திலோபதி அடிக்கடி சண்டை போட்டு கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவும் இதுபோல் அவர்கள் சண்டை போட்டு கொண்டனர்.

பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் சங்கீதா மனமுடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை பெற்றோர் வயல் வேலைக்கு சென்று விட்ட நிலையில் சங்கீதா வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com