நெல்லித்துறை பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

நெல்லித்துறை பவானி ஆற்றில் நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லித்துறை பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
Published on

மேட்டுப்பாளையம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் புலிக்கோட்டை கிட்டியா கவுண்டனூரை சேர்ந்தவர் கணேசன் (48). இவரது மனைவி அன்னக்கிளி.இவர்களுக்கு தீபக் கிருஷ்ணன்(21), அன்பு(10) என்ற 2 மகன்கள் உள்ளனர். தீபக் கிருஷ்ணன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 3 -ஆம் ஆண்டு படித்து வந்தார். 

கணேசன் தனது குடும்பத்தினருடன் சோமனூர் கருமத்தம்பட்டியில் உள்ள உறவினர் முத்துசாமி என்பவரது வீட்டிற்கு வந்திருந்தார். தீபக் கிருஷ்ணன் தனது கல்லூரி நண்பர்கள் கூறியதை மனதில் நினைத்து மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையில் உள்ள குண்டுக்கல்துறை பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காக தனது தம்பி அன்பு. மற்றும் நண்பர்கள் அருண்(16) ஜேம்ஸ்(19)தினேஸ்(19) ஆகியோருடன் வந்து ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அனைவருக்கும் நீச்சல் தெரியாது. அப்போது திடீரென தீபக்கிருஷ்ணன் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். தத்தளித்த அவர் மூச்சுத்திணறி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com