திருவொற்றியூரில் மாயமான கல்லூரி மாணவர் கடற்கரையில் பிணமாக மீட்பு

திருவொற்றியூரில் மாயமான கல்லூரி மாணவர் கடற்கரையில் பிணமாக மீட்டகப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலி (கோப்பு படம்)
பலி (கோப்பு படம்)
Published on

ராயபுரம்:

தண்டையார்பேட்டை வெங்கடாசலம் தெருவை சேர்ந்தவர் அசோகன். இவரது மகன் தாரகேஷ் (20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் கடந்த 15-ந்தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசில் பெற்றோர் புகார் செய்தனர்.

இந்த நிலையில் திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் கடற்கரையில் மாணவர் தாரகேஷ் பிணமாக கரை ஒதுங்கினார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மாயமான தாரகேஷ் கடலில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com