சின்னசேலம் அருகே வேன் மீது ரெயில் மோதி விபத்து- 2 பெண்கள் பலி

சின்னசேலம் அருகே ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். #TrainAccident
சின்னசேலம் அருகே வேன் மீது ரெயில் மோதி விபத்து- 2 பெண்கள் பலி
Published on

விழுப்புரம்:

சேலத்தில் இருந்து இன்று காலை விழுப்புரத்துக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு வந்தது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

அந்த ரெயில் இன்று மதியம் 12.45 மணி அளவில் சின்னசேலம் அருகே உள்ள பெரியசிருவத்தூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அங்குள்ள ஆளில்லா ரெயில்வே கேட்டை பயணிகளை ஏற்றி வந்த வேன் ஒன்று கடந்து செல்ல முயன்றது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் வேன் மீது ரெயில் மோதியது. இதனால் வேனில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

விபத்தில் சிக்கிய வேனை 1 கிலோ மீட்டர் தூரம் ரெயில் இழுத்து சென்றது. இந்த விபத்தில் வேனில் இருந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 12 பேரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். #TrainAccident

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com