செங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து வாலிபர் பலி

செங்கம் அடுத்த புதுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியானார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

செங்கம்:

செங்கம் பகுதியில் கடந்த 5 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதானல் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. புதுப்பாளையம் அரசு பள்ளி தெருவை சேர்ந்தவர் ராஜதுரை(23).

அவர் தனது வீட்டின் சுவர் அருகே நின்று அருகே நின்று கொண்டிருந்தார். மழையில் நனைந்திருந்த வீட்டின் சுவர் திடீரென இடிந்து ராஜதுரையின் மேல் விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த புதுப்பாளையம் போலீசார் இடிபாடுகளில் சிக்கியிருந்த ராஜதுரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் புதுப்பாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தஷ்ணாமூர்த்தி இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com